Budget Timeline: 1947 முதல் 2019 வரை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள்..

பட்ஜெட் Timeline

1973-74 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி அரசில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது கருப்பு பட்ஜெட் என இன்றளவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக 550 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

  • Share this:
1. இந்தியாவின் முதல் நிதியமைச்சராக பொறுப்பேற்ற ஆர்.கே.சண்முகம் செட்டி, சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை நவம்பர் 26, 1947 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளுள் இதுவும் ஒன்று. தோல்பையில் பட்ஜெட்டை எடுத்து வந்து தாக்கல் செய்தார். Photo: Wikimedia Commons

ஆர்.கே.சண்முகம் செட்டி


2. குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஜான் மத்தாய் . முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் இதுவாகும்.

ஜான் மத்தாய்


3. 1973-74 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி அரசில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது கருப்பு பட்ஜெட் என இன்றளவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக 550 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் யஷ்வந்த்ரோ பி.சவான் தாக்கல் செய்தார். நிலக்கரி சுரங்கங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், காப்பர் கார்ப்பரேஷன் ஆகியவற்றை தேசியமயமாக்க 56 கோடி ரூபாய் ஒதுக்கினார். அவரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், நிலக்கரி உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. Photo: Wikimedia Commons

யஷ்வந்த்ரோ பி.சவான்


4. 1986 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் வி.பி.சிங் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் "carrot and stick" என்ற அணுகுமுறையை அவர் கடைபிடித்தார். அதாவது, வெகுமதி மற்றும் தண்டனை ஒருசேர இருக்குமாறு இந்த பட்ஜெட் இருந்தது. MODVAT எனப்படும் மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி முறையை அவர் அறிமுகப்படுத்தினார். நுகர்வோர் மீதான வரிச்சுமையை குறைப்பதுடன், கடத்தல்காரர்கள், கறுப்புபண முதலைகள், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதற்கான திட்டங்களை கொண்டுவந்தார்.

வி.பி.சிங்


5.1991-92 ஆம் ஆண்டு பட்ஜெட் நிதியமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட மிகச்சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை மாற்றிமைக்கும் வகையில் இருந்தது. தாராளமயமாக்கலின் தொடக்கமாக அமைந்த இந்த பட்ஜெட், ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையை மாற்றியமைத்தது. புதிய பட்ஜெட்டால் இந்திய நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடும் சூழலையும் உருவாக்கிக்கொடுத்தது.

மன்மோகன் சிங்


6. 1997 ஆம் ஆண்டு நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது கனவு பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரிகளை பெருமளவு குறைத்தார். தனிநபர் வருமான வரி விகிதத்தை 40 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக குறைத்தார். மேலும், சில அடிப்படை கட்டணங்களையும் ரத்து செய்தார். வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் வரி வசூலில் மாற்றங்களை கொண்டுவந்தார்.

ப.சிதம்பரம்


7. நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவால் தாக்கல் செய்யப்பட்ட 2000-2001 ஆம் ஆண்டு பட்ஜெட் மில்லினியம் பட்ஜெட் என அழைக்கப்படுகிறது .ஏனென்றால், இந்த பட்ஜெட் இந்தியாவை ஒரு மென்பொருள் மேம்பாட்டு மையமாக்க ஊக்குவித்தது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் உலகளாவிய வரைபடத்தில் மென்பொருள் ஏற்றுமதியாளராக இந்தியா இடம்பெறுவதற்கு இந்த பட்ஜெட் காரணமாக அமைந்தது.

யஷ்வந்த் சின்ஹா


8. நாட்டின் 2வது பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலனி ஆதிக்கம் நிறைந்த காலத்தில் இருந்து ப்ரீப்கேஸில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் அதனை ஒழித்து முதன்முறையாக பாஹி கட்டா-வை அறிமுகப்படுத்தினார். பிப்ரவரி 1 ஆம் தேதி 2021 -22 ஆம் ஆண்டுக்கான நாட்டின் 2வது பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார்.

நிர்மலா சீதாராமன்


 
Published by:Arun
First published: