குஜராத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல்! எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்த காங்கிரஸ்

குதிரைபேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அகமதாபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பலன்பூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 5, 2019, 9:51 AM IST
குஜராத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல்! எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்த காங்கிரஸ்
தேர்தல் ஆணையம்
Web Desk | news18
Updated: July 5, 2019, 9:51 AM IST
குஜராத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அமித்ஷாவும், ஸ்மிருதி இரானியும் வெற்றி பெற்றதால் அந்த 2 இடங்களையும் ராஜினாமா செய்திருந்தனர். அதனால் குஜராத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

குஜராத் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும், பாஜக-வின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் ஜூகல்ஜி தாகோரும், காங்கிரஸ் சார்பில் சந்திரிகா சுதாசமாவும், கவுரவ் பாண்ட்யாவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் பேரவையில் 175 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் பாஜகவின் பலம் 100 ஆகவும், காங்கிரஸின் பலம் 71 ஆகவும் உள்ளது. 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இதன்படி, ஒவ்வொரு எம்.பி.க்கும் 88 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. இதன்மூலம் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், குதிரைபேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அகமதாபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பலன்பூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர்களுக்கு சொகுசு விடுதியில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... பட்ஜெட் 2019-ல் திருப்பூர் மக்களும், வணிகர்களும்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...