• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • india vs pakistan: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் யாகம்!

india vs pakistan: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் யாகம்!

இந்தியா வெற்றிபெற யாகம்

இந்தியா வெற்றிபெற யாகம்

கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஆர்வமுடம் பார்க்கும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் திகழ்ந்து வருகிறது.  வலிமையாக உள்ள இந்திய அணியுடன் மோத பாகிஸ்தானும் வலிமையான பேட்டிங் வரிசையுடன் தயாராக உள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்ச்சி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    2021ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைகிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சூப்பர்12 சுற்று தொடங்கியுள்ளதால் போட்டிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

    கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஆர்வமுடம் பார்க்கும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் திகழ்ந்து வருகிறது.  வலிமையாக உள்ள இந்திய அணியுடன் மோத பாகிஸ்தானும் வலிமையான பேட்டிங் வரிசையுடன் தயாராக உள்ளது. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இன்றைய ஆட்டத்தில் தங்கள் நாட்டு அணி வெற்றி பெற வேண்டும் என்று இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெங்களூருவைச் சேர்ந்த ரசிகர்கள் சிறப்பு யாகம் வளர்த்து வழிபாடு நடத்தினர்.

    இதையும் படிங்க: 82வது மன் கி பாத்: நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசுகிறார்!


     “அனைத்து இந்திய வீரர்களையும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் ... அவர்கள் இந்த உலகக் கோப்பையை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக கடவுளின் ஆசியை வேண்டுகிறோம்” என்று ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

    இந்த போட்டியில் பாகிஸ்தனை இந்தியா வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரார்த்தனையில் ஈடுபட்டதாக மற்றொரு ரசிகர் தெரிவித்தார்.

    மேலும் படிங்க: டி20 உலகக்கோப்பை : இந்தியாவுக்கு எதிராக வலிமையான அணியை இறக்கிய பாகிஸ்தான்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: