Home /News /national /

தீபாவளி: டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை.. ஆன்லைன் விற்பனைக்கும் அனுமதி இல்லை

தீபாவளி: டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை.. ஆன்லைன் விற்பனைக்கும் அனுமதி இல்லை

டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை

டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை

காற்று மாசு காரணமாகத் தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • New Delhi, India
    அடுத்த மாதம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு மற்றும் விற்பனைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இந்த தடையைப் பற்றித் தெரிவிக்கையில் இந்த தடை பட்டாசு உபயோகத்திற்கு முழுமையாகப் போடப்பட்டுள்ளது என்றார். அதன்படி,  பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடை ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பட்டாசு ஆன்லைன் விற்பனைக்கும் தடை போடப்பட்டுள்ளது.



    டெல்லி காவல்துறை, மாசுக்கட்டுப்பாடு துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து செயல்பட்டு, தடையை அமல்படுத்தத் திட்டம் வகுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    Also Read : உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

    உலகளவில்  அதிக காற்று மாசுபட்ட இடமாக டெல்லி நகரம் உள்ளது. இதனால், அங்கு காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  வாகனங்களுக்கு கட்டுப்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு தடை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டும் டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தீபாவளி அன்று வெடிக்கும் வெடிகளால் காற்று அதிகம் மாசு அடைவதுடன் டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவும் அதிகளவு பாதிப்பை சந்திக்கின்றன.
    Published by:Janvi
    First published:

    Tags: Air pollution, Ban firecrackers, Delhi

    அடுத்த செய்தி