வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி
புதிய வேளாண் சட்டத்தின்படி, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு உரிய தொகையை வணிகர்கள் 3 நாட்களில் திருப்பி செலுத்த வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.
- News18 Tamil
- Last Updated: November 29, 2020, 2:38 PM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த சட்டத்திருத்தம் விவசாயிகளின் தடைகளை களைவதுடன், புதிய பாதையை உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி 71-வது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அண்ணபூர்ணா தேவி சிலை கனடா அரசின் உதவியுடன் இந்தியாவிற்கு மீட்டு வரப்பட உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
அருங்காட்சியகங்கள், அஜந்தா குகை உள்ளிட்ட பாரம்பரியமிக்க இடங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், குரு நானக் தேவின் வழியை பின்பற்றி சீக்கிய சமுதாயத்தினர் கொரோனா காலத்திலும் மக்களுக்கு உணவு வழங்கி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். புதிய வேளாண் சட்டத்தின்படி, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு உரிய தொகையை வணிகர்கள் 3 நாட்களில் திருப்பி செலுத்த வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயி ஒருவர் சோளம் விற்பனை செய்ததற்கு உரிய தொகையை வர்த்தகர் திருப்பி வழங்காததால், புதிய வேளாண் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து தனக்கு சேர வேண்டிய தொகையை சில நாட்களில் பெற்றுவிட்டதாகவும் மோடி விளக்கமளித்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் குதித்திருக்கும் நிலையில், இந்த சட்டத்திற்கு ஆதரவாக மோடி பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
பிரதமர் நரேந்திர மோடி 71-வது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அண்ணபூர்ணா தேவி சிலை கனடா அரசின் உதவியுடன் இந்தியாவிற்கு மீட்டு வரப்பட உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
அருங்காட்சியகங்கள், அஜந்தா குகை உள்ளிட்ட பாரம்பரியமிக்க இடங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், குரு நானக் தேவின் வழியை பின்பற்றி சீக்கிய சமுதாயத்தினர் கொரோனா காலத்திலும் மக்களுக்கு உணவு வழங்கி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.