• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Farmers Protest | வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது - பியூஸ் கோயல் 

Farmers Protest | வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது - பியூஸ் கோயல் 

Youtube Video

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது. தேவைப்பட்டால் வேளாண் சட்டத்தை 2 ஆண்டுகள் கூட நிறுத்திவைக்க அரசு தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:


    புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 57-வது நாளாக நேற்று நீடித்தது. இந்நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் ஆகியோரும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும், தேவைப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    போலியான வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை பதிவுசெய்து, விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்கு அழைப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். குற்றம்செய்யாதவர்கள் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.  முன்னதாக பேச்சுவார்த்தையின் போது, விவசாயிகளின் சந்தேகங்களை தீர்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் படிக்க...1959-ல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல்... திமுக-வினருக்கு நம்பிக்கையை விதைத்த திருப்புமுனை...

    சட்டங்கள் குறித்து பிரிவு வாரியாக விவாதிக்க அரசு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய குழுவை அமைக்கலாம் என்றும், சட்டத்தை உச்சநீதிமன்றம் 2 மாத காலத்துக்கு நிறுத்திவைத்துள்ள நிலையில், தேவைப்பட்டால், 2 ஆண்டுகள் நிறுத்திவைக்க அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆலோசித்து நாளை முடிவை அறிவிப்பதாக மத்திய அரசிடம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.







    farmersஉடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: