• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாட்டில் தற்கொலை செய்துகொண்ட விவசாய கூலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நாட்டில் தற்கொலை செய்துகொண்ட விவசாய கூலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

நாடு தழுவிய அளவில் 2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாய கூலிகள் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    2020ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்றப்பதிவு ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, நாடு முழுவதும் 5,098 விவசாயக் கூலிகள் 2020ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர்.

    2019ம் ஆண்டில் 4,324 விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது கடந்த ஒரே ஆண்டில் 18 விழுக்காடு அதிகரித்துள்ளது. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 4,940 பேர் 2020ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 விழுக்காடு குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் குத்தகை விவசாயிகள் 828 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2020ம் ஆண்டில் 639 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    மாநிலங்களை பொருத்தவரை மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேச மாநிலங்களில் விவசாய கூலிகள் தற்கொலை கடந்த ஆண்டில் அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 6 பேர் 2019ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த ஆண்டில் 76 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் விவசாயத்துறை வளர்ச்சியைக் கண்டபோதிலும், பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் நிதி உதவி கிடைக்கப் பெறாததால் அதிகளவில் விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: