Home /News /national /

’முழு அடைப்பு 11 மணிமுதல் 3 மணிவரை நடைபெறும்..’ - மக்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை என விவசாய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு..

’முழு அடைப்பு 11 மணிமுதல் 3 மணிவரை நடைபெறும்..’ - மக்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை என விவசாய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு..

டெல்லி சலோ போராட்டம்

டெல்லி சலோ போராட்டம்

மருத்துவ சேவைகளான ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய சேவைகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாது என உறுதி அளித்துள்ளனர்.

    பாரத் பந்த் அல்லது நாடு தழுவிய முழு அடைப்பு நாளை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் இந்த முழு அடைப்பு நாளை பகல் 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடியும் என பாரதீய கிசான் யூனியன் அறிவித்துள்ளது. கடந்த 11 நாட்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள், இதுவரை மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் எதுவும் காணப்படாத நிலையில், நாளை நாடு தழுவிய முழு அடைப்பு நடக்கவுள்ளது. அப்போது சாலை மறியல்களும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “நாங்கள் சாதாரண மனிதர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை. 11 மணிக்கு தொடங்க இருக்கிறோம். 3 மணிக்கு முடிக்கவேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம்” என விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

    மேலும் படிக்க: இந்திய உணவுப் படைவீரர்கள் அவர்கள்தான்..' - விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு..

    பாரத் கிசான் யூனியனைச் சேர்ந்த ராகேஷ் டிக்தெய்த், “மக்கள் அவர்களின் அடையாள அட்டையை காட்டிவிட்டு செல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார். மருத்துவ சேவைகளான ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய சேவைகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாது என உறுதி அளித்துள்ளனர்.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Agricultural act, Agriculture, Delhi chalo, Farm laws, Farmers Protest, Farmers Protest Delhi, Haryana, Punjab

    அடுத்த செய்தி