முகப்பு /செய்தி /இந்தியா / எல்லையில் முழுமையான போர் நிறுத்தம்: இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே ஒப்பந்தம்

எல்லையில் முழுமையான போர் நிறுத்தம்: இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே ஒப்பந்தம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

இது தெற்காசியாவில் ஸ்திரத்தன்மைக்கு சாதகமான முடிவு என அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

  • Last Updated :

எல்லையில் போர் நிறுத்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைபிடிக்க இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருநாடுகளுக்கு இடையிலான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமைதியை சீர்குலைக்கக் கூடிய மற்றும் வன்முறையை தூண்டும் செயல்களை முன்கூட்டியே கணித்து அவற்றை தடுத்து நிறுத்தவும் இருநாட்டு இராணுவ கமான்டர்கள் மத்தியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தெற்காசியாவில் ஸ்திரத்தன்மைக்கு சாதகமான முடிவு என அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

Must Read : Soorarai Pottru: ஆஸ்கர் விருது பட்டியலில் முந்திச் செல்லும் சூரரைப்போற்று

இந்தியா பாகிஸ்தானுடன் சாதாரண அண்டை நாட்டு உறவை பேண விரும்புவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Border Security Force, India and Pakistan, Indian army, Pakistan Army