ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பீகார், ஹரியானா மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னிபாத் என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நான்கு ஆண்டுகள் முடிந்ததும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 75 சதவிகிதம் பேர் பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால், ராணுவத்தில் சேர உடற்தகுதியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் வேலை என்றால் அதற்கு பின்னர் நிலையான வேலை பெற, ஏற்கனவே படித்து தயாராக இருக்கும் மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்றும் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலையில் டயர்களை கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், ரயில் மறியலில் ஈடுபட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
भभुआ में प्रदर्शनकारियों ने ट्रेन में आग लगाई, जमकर तोड़-फोड़ की. #Agnipath #Agniveer pic.twitter.com/uW7pqPIeMR
— Utkarsh Singh (@UtkarshSingh_) June 16, 2022
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைமூர் மாவட்டம் பபுவா நகரில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று சப்ரா ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜினுக்கு போராட்டக்கார்கள் தீ வைத்தனர்.
ஆரா ரயில் நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் மேசை, நாற்காலிகளை வீசியெறிந்து தீ வைத்து கொளுத்தினர். அதைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதேபோல மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் வீதிகளில் திரண்டனர். நகரின் முக்கிய சாலைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் மறிக்கப்பட்டன. கோலா கா மந்திர் பகுதியில் திரண்ட இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் டயர்களை எரித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் பிர்லாநகர் ரயில் நிலையத்திற்கு வந்த இளைஞர்கள் தீ வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.