முகப்பு /செய்தி /இந்தியா / அக்னிபத் குறித்த வதந்திகளை பரப்பியதால் 35 வாட்ஸ்அப் குழுக்களுக்குத் தடை!

அக்னிபத் குறித்த வதந்திகளை பரப்பியதால் 35 வாட்ஸ்அப் குழுக்களுக்குத் தடை!

பீகார் போராட்டம்

பீகார் போராட்டம்

Ban on 35 whatsapp groups: ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பரப்பி பொதுமக்களை தூண்டிவிட்டு உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் இணையம் பயன்படுத்தப்படுவதாக பீகார் மாநில அரசு கூறியது.

  • Last Updated :

அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம் குறித்து 'தவறான தகவல்களை பரப்பியதற்காக' முப்பத்தைந்து வாட்ஸ்அப் குழுக்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.

போலி செய்திகளை' பரப்பியதற்காகவும், போராட்டங்களை ஏற்பாடு செய்ததற்காகவும் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'சமூக ஊடக குற்றவாளிகளுக்கு' எதிரான ஒடுக்குமுறையின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து, நாட்டின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதிகரித்து வரும் பரபரப்பான சூழலால் பீகாரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.  ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப்  பரப்பி பொதுமக்களை தூண்டிவிட்டு உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் இணையம் பயன்படுத்தப்படுவதாக மாநில அரசு கூறியது.

அதிகப்படியான கலவரங்கள் பிஹாரில் நடந்து வருகிறது. ஜூன் 17 அன்று 3 ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்து வருகிறது.

பயிற்சி மையங்கள் 

பீகார் அதிகாரிகள் பயிற்சி மையங்களின் ஆபரேட்டர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர், அவர்களில் ஏழு பேர் பாட்னாவில் உள்ள மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பு படையினரை உஷார் நிலையில் வைத்துள்ளோம். தேவைப்பட்டால், பாட்னாவில் இணைய சேவையை நிறுத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்று பாட்னா மாவட்ட நீதிபதி சந்திரசேகர் சிங் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.

சமீபத்திய தகவல்களின்படி, பாட்னாவில் 190 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆறு பயிற்சி நிறுவனங்கள் மீதும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அக்னிபாத் எதிரான போராட்டத்தில் பீகாரில் 3 ரயில் பெட்டிகள் எரிப்பு

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இளைஞர்களை தூண்டியதாக, பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டையில் உள்ள பயிற்சி நிறுவன உரிமையாளரை தெலுங்கானா காவல்துறையும் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜூன் 17 அன்று செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த தீ வைப்பு மற்றும் வன்முறை தொடர்பாக 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி அகாடமிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஒன்றுகூடும் படி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம்  செய்திகளை பரப்பியுள்ளனர். பெட்ரோல் கேன்களையும் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ராணுவ ஆள்சேர்ப்பு பயிற்சி அகாடமிகள் சதியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    இதற்கிடையில், 'அக்னிபத்' ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் மூன்று சேவைகளில் சேர விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் தாங்கள் எந்தவிதமான போராட்டம், தீவைப்பு அல்லது காழ்ப்புணர்ச்சியில் ஈடுபடவில்லை என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று மூத்த இராணுவ கூடுதல் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

    First published:

    Tags: Agnipath, Ban, Bihar, WhatsApp