மீண்டும் வடகலை தென்கலை பிரச்னை : போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க கட்டப்பட்ட மேம்பாலத்தில் நாமம் போடுவதில் சர்ச்சை..!

மீண்டும் வடகலை தென்கலை பிரச்னை

'ப' வடிவ நாமத்தை மேம்பால தூண்களுக்கு தற்போது அலங்கரித்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  திருப்பதியில் கட்டப்பட்டு வரும் கருடா மேம்பாலத்தில் தாங்கள் விரும்பும் நாமத்தையே பதிக்க வேண்டும் எனக் கோரி வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

  திருப்பதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நந்தி சந்திப்பு அருகே ஆறு கிலோமீட்டர் நீளத்தி்ல் 684 கோடி ரூபாய் செலவில் கருடா மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலத்தின் தூண்களில் தென்கலை நாமம் வரையப்பட்டதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக அமைக்கக்கூடிய பாலத்தில் நாமம் அமைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பாலத்தில் நாமம் போடுவதா வேண்டாமா, எந்த வடிவில் போடுவது என்பது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து கட்டுமான நிறுவனம் தென்கலை வடகலை இரண்டிற்கும் தொடர்பில்லாத ஆங்கிலேயர் காலத்தில் ஏழுமலையானுக்கு அணிவிக்கும் படி தெரிவிக்கப்பட்ட 'ப' வடிவ நாமத்தை மேம்பால தூண்களுக்கு தற்போது அலங்கரித்துள்ளனர்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: