ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஷாருக்கான் யார் எனக் கேட்ட முதலமைச்சர்.. நள்ளிரவு வந்த அந்த போன் கால்..

ஷாருக்கான் யார் எனக் கேட்ட முதலமைச்சர்.. நள்ளிரவு வந்த அந்த போன் கால்..

பதான் படம் குறித்து ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா

பதான் படம் குறித்து ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா

யார் அந்த ஷாருக்கான் என முதலமைச்சர் பதில் அளித்தது பரபரப்பை கிளப்பியது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல் ஒன்றில் காவி வண்ண பிகினி அணிந்திருப்பதாகவும், இது இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து பதான் படத்தை திரையிடக் கூடாது என படத்தின் ப்ரமோஷன் நடத்தப்படும் மால்கள் மற்றும் திரையரங்குகளில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அசாம் மாநிலத்தின் சில நகரங்களில் பதான் திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகள் சூறையாடப்பட்டன. போஸ்டர் கிழிக்கப்பட்டு அவை எரிக்கப்பட்டன. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் "யார் அந்த ஷாருக்கான்?.. எனக்கு அவரது படம் பதான் பற்றியெல்லாம் தெரியாது" என்று பதில் அளித்தார்.

யார் அந்த ஷாருக்கான் என முதலமைச்சர் பதில் அளித்தது பரபரப்பை கிளப்பியது.  இந்த நிலையில்  முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவுக்கு ஷாருக்கான் நள்ளிரவில் போன் செய்து கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தனது ட்விட்டர் பதிவில்,  “பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நள்ளிரவு 2 மணிக்கு என்னை தொடர்பு கொண்டு பேசினார். கவுஹாத்தியில் அவரது படம் திரையிடுவதில் ஏற்பட்ட பிரச்னை குறித்து கவலை தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தேன்" என்று பதிவிட்டார்.

பதான் 25ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய உரையில், "நம்மில் சிலர் திரைப்படங்களைப் பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள். தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Assam, Bollywood, Shah rukh khan