கால்நடை மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே மேலும் ஒரு பெண்ணின் சடலம்...!

அந்தப் பெண்ணை மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்து எரித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

கால்நடை மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே மேலும் ஒரு பெண்ணின் சடலம்...!
News18
  • News18
  • Last Updated: November 30, 2019, 2:06 PM IST
  • Share this:
ஐதராபாத் அருகே உள்ள சன்சாபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொன்ற இடத்தின் அருகே மேலும் ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்சன்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவர் டாக்டர் பிரியங்கா ரெட்டியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லாரி டிரைவர் கிளீனர்கள் ஆகிய நான்கு பேர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் இரண்டு பேர் கிரிமினல்கள் இரண்டு பேர் ஆக மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


தற்போது அதே இடத்தில்  25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லாது வேறு யாரேனும் எரித்துக் கொன்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமும் பூஜைகள் நடைபெறும் கோவில் அருகே நடைபெற்ற இந்த படுகொலை பற்றிய தகவல் அறிந்த சன்ஷாபாத் போலீசார் உடன் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று எரித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக போலீசார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்