• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 1999ல் வாஜ்பாய்க்கு பிறகு... போப் பிரான்சிஸை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

1999ல் வாஜ்பாய்க்கு பிறகு... போப் பிரான்சிஸை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

Modi - pope francis

Modi - pope francis

1999ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது போப் இரண்டாம் ஜான் பால் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.

  • Share this:
ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகனில் கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்சிஸை சந்தித்து பேசியிருக்கிறார்.

அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும், 16வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி டெல்லியிலிருந்து, தனி விமானம் மூலம் இத்தாலிக்கு நேற்று சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகளும், பிரதமரை நேரில் வந்து வரவேற்றனர்.

இதனிடையே வாடிகன் நகரில் கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பிரதமர் மோடி உரையாடியிருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர். முதலில் 20 நிமிடங்கள் மட்டுமே சந்திப்புக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போப் பிரான்சிஸுடன் பிரதமர் மோடி உரையாடினார். மேலும் அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Also read: சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர் – பிரதமர் மோடி புகழாரம்

போப் பிரான்சிஸை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறும் அழைத்தேன்.” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



போப் பிரான்சிஸுடனான சந்திப்பில் வறுமை ஒழிப்பு மற்றும் பூமியினை சிறப்பான வாழ்விடமாக மாற்றுவதற்காக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also read: மோடியின் வலிமைக்கு காங்கிரஸ் தான் காரணம் – காங்கிரஸை காய்ச்சி எடுத்த மம்தா பானர்ஜி!

1999ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது போப் இரண்டாம் ஜான் பால் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அதன் பிறகு போப் ஒருவருடன் இந்திய பிரதமரின் சந்திப்பு தற்போது தான் நடைபெற்றுள்ளது.

அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற உள்ள, ஜி 20 உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பிரதம மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் பால்சோனோரோ, தென்கொரிய அதிபர் மூன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள். பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து உச்சி மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: