உ.பி., ஒடிசாவைத் தொடர்ந்து ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா!

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கண்ட படுதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அஜோய் குமார் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: May 27, 2019, 1:43 PM IST
உ.பி., ஒடிசாவைத் தொடர்ந்து ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா!
அஜோய் குமார்
Web Desk | news18
Updated: May 27, 2019, 1:43 PM IST
உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.

இதையடுத்து உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வந்தனர். தற்போது ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவரான அஜோய் குமாரும் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கண்ட படுதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அஜோய் குமார் தெரிவித்துள்ளார். இதேபோல், அஜோய் குமாருக்கு அடுத்து அமேதி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரான யோகேந்திர மிஸ்ராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் பார்க்க: எவரெஸ்ட்டில் அலைமோதும் கூட்டம்... 10 பேர் உயிரிழந்த சோகம்
First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...