ஹோம் /நியூஸ் /இந்தியா /

உஷார்... இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு அதிகரித்த கொரோனா எண்ணிக்கை

உஷார்... இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு அதிகரித்த கொரோனா எண்ணிக்கை

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

CoronaVirus | 2 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் வாராந்திர கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

உலக அளவில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் பிஎஃப்.7 என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்தியாவில் கொரோனா பரவல் என்பது பெரிய அளவில் இல்லை. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் வாராந்திர கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கடந்த வாரம் இருந்த 1,103 என்ற எண்ணிக்கையை விட 11 சதவிகிதம் உயர்ந்து 1,219 என்ற அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, இமாச்சல பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கொரோனா சற்று அதிகரித்துள்ளது. எனினும், கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டுதான் இருக்கிறது.

இதனிடையே இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் கொரோனா அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா அதிகரித்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது” என்றார்.

First published:

Tags: Corona positive, Covid-19, Omicron BF 7 Variant