மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு... பிரதமர் மோடி ட்வீட்

Vijay R | news18-tamil
Updated: October 20, 2019, 10:48 AM IST
மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு...  பிரதமர் மோடி ட்வீட்
Vijay R | news18-tamil
Updated: October 20, 2019, 10:48 AM IST
சீன அதிபுர் உடனான சந்திப்பிற்கு பின் மாமல்லபுரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதாக தமிழக முதல்வர் பழனிசாமி என்னிடம் கூறியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த 10, 11ம் தேதிகளில் நடந்தது. மாமல்லபுரம் வந்த இரு தலைவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூனன் தனுசு, வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கோயில் உள்ளிட்ட இடங்களின் வரலாற்று பெருமையை சீன அதிபருக்கு மோடி எடுத்துரைத்தார்.

இந்நிலையில், நேற்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக ஷாருக் கான், ஆமிர் கான் கான் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.


அப்போது, மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு பின் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதாக தமிழக முதல்வர் என்னிடம் கூறினார். வரலாற்று சின்னமான இடத்தை பலர் வந்து ரசித்து செல்கின்றனர் என்று அவர்களிடம் பிரதமர் கூறினார்.
Also Watch

First published: October 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...