ஹோம் /நியூஸ் /இந்தியா /

சந்திரயானை அடுத்து ஆதித்யா.... சூரியனை ஆராய இஸ்ரோ திட்டம்!

சந்திரயானை அடுத்து ஆதித்யா.... சூரியனை ஆராய இஸ்ரோ திட்டம்!

இஸ்ரோ சிவன்

இஸ்ரோ சிவன்

வெள்ளி கிரகத்தை ஆராயவும் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் விண்கலத்தை அனுப்ப உள்ளதாக சிவன் கூறியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சந்திரயான்-2- யை தொடர்ந்து அடுத்த ஆண்டில் சூரியனின் வெளிப்பரப்பை ஆராய ஆதித்யா விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ, ஆதித்யா - எல்.1 என்ற செயற்கை கோளை அடுத்த ஆண்டு முதல் 6 மாதத்திற்குள் விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரியனின் வெளிப்பரப்பை ஆராய்வதற்காகவே இந்த விண்கலம் அனுப்பப்படுவதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிம் பேசியவர், இந்த ஆதித்யா விண்கலத்தின் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் மாறுபாட்டை தெரிந்துக்கொள்ள முடியும். மேலும் சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களை பற்றிய ஆராய்ச்சி பணிகளிலும் இந்த விண்கலம் ஈடுபடும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று வெள்ளி கிரகத்தை ஆராயவும் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் விண்கலத்தை அனுப்ப உள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார்.

First published:

Tags: About chandrayaan 2, Chandrayaan, Chandrayaan 2, Chandrayaan 2 date, Chandrayaan 2 in tamil, Chandrayaan 2 isro, Chandrayaan 2 lander name, Chandrayaan 2 launch date, Chandrayaan 2 launch time, Chandrayaan 2 live launch, Chandrayaan 2 mission, Chandrayaan 2 news, Chandrayaan 2 photos, Chandrayaan 2 tamil news, Chandrayaan 2 video, India chandrayaan 2, ISRO, ISRO chairman K Sivan, Isro chandrayaan 2, Isro chandrayaan 2 launch, Isro launch, Lander chandrayaan 2, Live chandrayaan 2, Name of chandrayaan 2, What is chandrayaan 2