கியூ-ஆர் கோட் (QR Code) ஸ்கேனிங்குகளுக்கான இந்தியாவின் யூனிஃபைட் பேமெண்ட் இண்டர்ஃபேஸை (Unified Payment Interface - UPI) ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பூடான் மாறியிருக்கிறது. அதே போல சிங்கப்பூரை தொடர்ந்ந்து BHIM-UPIயினை வணிக இடங்களில் ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது நாடாக பூடான் மாறியிருப்பதாக NPCI சர்வதேச பேமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
NPCI என்பது இந்தியாவில் சில்லறை பேமெண்ட்கள் மற்றும் தீர்வு முறைகளை இயக்குவதற்கான ஒரு குடை அமைப்பாகும், இது இந்தியாவில் வலுவான கட்டணம் மற்றும் தீர்வு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகளின் சங்கத்தின் ஒரு முயற்சியாகும்.
Also Read:
₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!
காணொளி காட்சி மூலம் பூடானில் BHIM-UPI அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மகிழ்ச்சியின் நிலத்தை” காணச்செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இது உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார். பூடானை மகிழ்ச்சியின் நிலம் என அவர் குறிப்பிட்டார். BHIM-UPIஐ பொருத்தவரையில் நிதி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஒரு சாதனையாக அது அமைந்துள்ளது.
Also Read:
அவ்ளோ கண்டிப்பான பழங்குடியின கிராமத்துக்குள்ளேயே கொரோனா பரவியது எப்படி?: குழம்பும் அதிகாரிகள்!
இந்தியாவிலிருந்து பூடானுக்கு ஆண்டு தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
Bharat Interface for Money (BHIM), இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் செயலியாகும். இது UPI வழியாக இயங்குகிறது. இதன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகள் ஒற்றை மொபைல் செயலியில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது பயனர்களுக்கும், சில்லறை வர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒன்றாக மாறியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோவிட் -19 தொற்றுநோயால் ஊரடங்கு அமலான போது, பணம் செலுத்துவதற்கான "பயனுள்ள வழிமுறையாக" BHIM-UPI மாறியது. 2020 - 21 நிதியாண்டில், 41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 22 பில்லியன் பணப் பறிமாற்றங்கள் BHIM-UPI வழியாக நடைபெற்றிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமையுடன் குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.