ஹோம் /நியூஸ் /இந்தியா /

மோடியின் வலிமைக்கு காங்கிரஸ் தான் காரணம் - காங்கிரஸை காய்ச்சி எடுத்த மம்தா பானர்ஜி!

மோடியின் வலிமைக்கு காங்கிரஸ் தான் காரணம் - காங்கிரஸை காய்ச்சி எடுத்த மம்தா பானர்ஜி!

Rahul gandhi - Mamata banerjee

Rahul gandhi - Mamata banerjee

காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு பப்ளிசிட்டி செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவராக மாற்றி வருவதே காங்கிரஸ் தான் என்றார் மம்தா பானர்ஜி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நரேந்திர மோடியை மேலும் மேலும் பலம்மிக்கவராக ஆக்குவதே காங்கிரஸ் கட்சி தான், பாஜகவுக்கு பப்ளிசிட்டி தேடித் தரும் பணியில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கினார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடியின் பலத்தை ராகுல் புரிந்து கொள்ளவில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மம்தாவும் அதே பாணியில் காங்கிரஸ் கட்சியை நேரடியாக விமர்சித்திருப்பது தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரசாந்த் கிஷோர்:

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி. இவரின் இந்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவர் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். அடுத்த ஆண்டு கோவா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அங்கு நிலை நிறுத்தும் பணிக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். வரும் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட உள்ள நிலையில் மம்தா பானர்ஜியும், பிரசாந்த் கிஷோரும் கோவாவில் முகாமிட்டுள்ளனர்.

Also read:  முகத்தை மூடி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய 9ம் வகுப்பு மாணவர்கள் – சொன்ன காரணத்தால் அதிர்ச்சி!

புரிந்து கொள்ளாத ராகுல்:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் பிரசாந்த் கிஷோர் பேசும்போது, தோற்றாலும், ஜெயித்தாலும் அடுத்த 40 ஆண்டுகளுக்கு தேசிய அளவில் பாஜக நிலைத்து நிற்கும், பிரதமர் மோடியின் பலம் என்ன அவர் ஏன் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவராக இருக்கிறார் என ராகுல் காந்தி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். ராகுல் நினைப்பது போல மக்கள் மோடியை அவ்வளவு எளிதில் தூக்கி எறிந்து விட மாட்டார்கள் என ராகுல் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் நேரடியாக தாக்கி பேசியிருந்தார்.

காங்கிரஸை காய்ச்சிய மம்தா:

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மீது புதிய தாக்குதலை தொடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

Also read:  2ம் வகுப்பு மாணவனை முதல் மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு தலைமையாசிரியர் அளித்த கொடூர தண்டனை!

பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த விஜய் சர்தேசாய் தலைமையிலான கோவா முன்னேற்ற கட்சியுடன், கூட்டணியை உறுதி செய்த மம்தா பானர்ஜி, செய்தியாளர்களிடையே பேசும்போது, “காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு பப்ளிசிட்டி செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவராக மாற்றி வருவதே காங்கிரஸ் தான்.

காங்கிரஸால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுகிறது. மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு எதிராக மோதாமல் என்னுடனும், என் கட்சியை எதிர்த்தும் மோதினர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர்கள் பூச்செண்டு தருவோம் என்றா?” இவ்வாறு மம்தா பேசினார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Published by:Arun
First published:

Tags: BJP, Congress, Goa, Mamata banerjee, Narendra Modi, Prashant Kishor, Rahul gandhi, TMC