Home /News /national /

போராட்டக்காரர்கள் அழுகிறார்கள்; ஏனென்றால் யோகி ஆட்சி! உத்தரப் பிரதேச வன்முறை குறித்து முதல்வர் சர்ச்சை ட்வீட்

போராட்டக்காரர்கள் அழுகிறார்கள்; ஏனென்றால் யோகி ஆட்சி! உத்தரப் பிரதேச வன்முறை குறித்து முதல்வர் சர்ச்சை ட்வீட்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

  • News18
  • Last Updated :
    வன்முறையில் ஈடுபட்ட ஒவ்வொரு போராட்டக்காரர்களும் தற்போது அழுது கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இங்கு இருப்பது யோகி ஆதித்யநாத் அரசு என்று அவருடைய அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் முசாபர்பூர், மீரட், சம்பல், பெரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறையில் 20 பேர் உயிரிழந்தனர்.

    காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டால்தான் அனைவரும் உயிரிழந்தனர் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் குற்றம்சாட்டிவருகின்றனர். இதற்கிடையில் நேற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதுவரையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் மாநில காவல்துறைத் தலைவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக யோகிஆதித்யநாத் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ஒவ்வொரு கலவரக்காரர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எல்லா போராட்டக்காரர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். யோகி ஆதித்யநாத்தின் தீவிரமான நடவடிக்கையைப் பார்த்த ஒவ்வொருவரும் மவுனமாகியுள்ளனர். பொதுச் சொத்தை சேதப்படுத்தும் ஒவ்வொருவரும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

    எல்லா வன்முறை போராட்டக்காரர்களும் அழுதுகொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய ட்விட்டர் பதிவு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Citizenship Amendment Act, Yogi adityanath

    அடுத்த செய்தி