எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன்? மோடிக்கு மெஹ்பூபா முஃப்தி கேள்வி

மோடியின் பேச்சுக்கு பதிலளித்த முஃப்தி, ‘எதற்காக, பிரதமர் தேர்தலுக்கு முன்பு மோடி, அரசியல் குடும்பங்களை திட்டுகிறார்.

news18
Updated: April 14, 2019, 7:03 PM IST
எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன்? மோடிக்கு மெஹ்பூபா முஃப்தி கேள்வி
மெஹ்பூபா முஃப்தி
news18
Updated: April 14, 2019, 7:03 PM IST
தேசிய மாநாட்டுக் கட்சியுடனும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் கூட்டணி வைத்தது ஏன் என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகிய இரண்டு பேரின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஜம்மு காஷ்மீரை சீரழித்துவருகின்றன.

இந்தியாவை துண்டாக்க நான் விடமாட்டேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி பிரதமர் வேண்டும் என்று ஓமர் அப்துல்லா கேட்கிறார். இது நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடும்’ என்று தெரிவித்தார். மோடியின் பேச்சுக்கு பதிலளித்த முஃப்தி, ‘எதற்காக, பிரதமர் தேர்தலுக்கு முன்பு அரசியல் குடும்பங்களை திட்டுகிறார்.

பின்னர், தேர்தலுக்குப் பிறகு தூதுவர்களை அனுப்பி அவர்களுடன் கூட்டணி வைக்கிறார். 99-ம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்தனர். 2015-ம் ஆண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்தனர். முஸ்லீம்களை விரட்டவேண்டும் என்ற நச்சுத் தன்மை கொண்ட சிந்தனையுடன் பா.ஜ.க உள்ளது’ என்று விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...