Home /News /national /

பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்.. தீவிர வொர்க் அவுட்டில் களம் இறங்கிய பீகார் எதிர்க்கட்சி தலைவர்..

பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்.. தீவிர வொர்க் அவுட்டில் களம் இறங்கிய பீகார் எதிர்க்கட்சி தலைவர்..

ஜீப்பை இழுத்து வொர்க் அவுட் செய்யும் தேஜஸ்வி

ஜீப்பை இழுத்து வொர்க் அவுட் செய்யும் தேஜஸ்வி

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்வை பிரதமர் மோடி எடை குறைக்க சொன்ன நிலையில், கடந்த ஒரு வாரமாக தீவிர வொர்க் அவுட்களில் அவர் ஈடுபடுகிறார்.

    பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் சமீப நாட்களாகவே பாடி பிட்னஸ்சில் கவனம் செலுத்தும் விதமாக விளையாட்டு மற்றும் வொர்க் அவுட்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். பிரதமர் நரேந்திர மோடி இவரிடம் கூறிய ஆலோசனை தான் இதற்கு காரணமே என பரபரப்பாக பேசப்படுகிறது.

    ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் ஆவார். பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் உள்ளார்.

    அன்மையில் பீகார் சட்ட்பேரவை விழாவில் பங்கேற்க பீகார் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். இந்த விழாவில் முதலமைச்சர் நிதீஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் தேஜஸ்வி யாதவிடம் பேசி நலம் விசாரித்த பிரதமர் மோடி, தேஜஸ்வி யாதவ் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தி ஆலோசனை கூறியுள்ளார். அத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் லாலு பிரசாத் யாதவின் உடல் நலன் குறித்தும் அவர் விசாரித்துள்ளார்.

    இதையும் படிங்க: குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்.. வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?

    அதற்கு தேஜஸ்வி தந்தை தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளார். அவரால் தற்போது நாற்காலியில் அமர்ந்து பேச முடிகிறது என்றுள்ளார். 32 வயதான தேஜஸ்வியை உடல் எடையை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறிய நிலையில், கடந்த சில நாள்களாகவே கிரிக்கெட் விளையாடுவது, ஏதேனும் உடல் பயிற்சி செய்வது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதன் வீடியோக்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.


    இந்நிலையில், இன்று அவர் தரப்பில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தேஜஸ்வி யாதவ் ஜீப் ஒன்றை கைகளால் இழுத்து உடல் பயிற்சி செய்தார். அரசியலில் எதிர் தரப்பாக இருந்தாலும் உடல் நலம் சார்ந்து பிரதமர் கூறிய கருத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு தேஜஸ்வி வொர்க் அவுட் செய்து வருகிறார் என நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bihar, Fitness, PM Modi, RJD, Viral Video

    அடுத்த செய்தி