Home /News /national /

ஆட்சி மாற்றம் நிகழ்ந்த அடுத்த நாளே நோட்டீஸ் - வருமான வரித்துறை லவ் லெட்டர் அனுப்பியுள்ளது என சரத் பவார் கிண்டல்

ஆட்சி மாற்றம் நிகழ்ந்த அடுத்த நாளே நோட்டீஸ் - வருமான வரித்துறை லவ் லெட்டர் அனுப்பியுள்ளது என சரத் பவார் கிண்டல்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியுடன் புதிய ஆட்சி நேற்று அமைந்துள்ள நிலையில், அடுத்த நாளே சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. 2004,2009,2014 மற்றும் 2020ஆகிய ஆண்டுகளில் தேர்தல் போட்டியிடும் போது தாக்கல் செய்த வேட்புமனுவை குறித்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சரத் பவார் தனது ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் கருத்துக்களுக்கு மாற்று கருத்து கொண்ட நபர்களுக்கு வருமான வரித்துறை கருவியாக செயல்படுகிறது. எனக்கும் வருமான வரித்துறை இது போன்று ஒரு காதல் கடிதம் அனுப்பியுள்ளது. 2004ஆம் ஆண்டு அன்றைய மக்களவைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவை வைத்து இப்போது கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் மகேஷ் தாப்சே இது குறித்து கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தற்செயலானதா அல்லது வேறு ஏதேனுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து வெற்றியும் பெற்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதலமைச்சர் பதவி தொடர்பாக எழுந்த பூசல் காரணமாக சிவசேனா கூட்டணியை விட்டு வெளியேறியது. இதன் காரணமாக தனிப்பெரும் கட்சியாக இருந்து பாஜக ஆட்சி அமைக்கவில்லை. மாறாக சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீட்டித்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார்.

    இதையும் படிங்க: ரவுடிகளுக்கு சிகரெட் பாக்கெட்டுகளை விற்க உதவி பங்குபோட்ட போலீஸ் - 4பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை

    தொடர்ந்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக ஆகியுள்ள நிலையில், கடைசி நேர ஏற்பாடாக முன்னாள் முதலமைச்சரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த புதிய ஆட்சி நேற்று அமைந்துள்ள நிலையில், அடுத்த நாளே சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Income tax, Maharashtra

    அடுத்த செய்தி