Home /News /national /

முஸ்லிம்களுக்கு அடுத்து கிறித்துவர்களைக் குறிவைக்கும் இந்துத்துவா அரசியல்- ப.சிதம்பரம்

முஸ்லிம்களுக்கு அடுத்து கிறித்துவர்களைக் குறிவைக்கும் இந்துத்துவா அரசியல்- ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

முஸ்லிம்கள் முதலில் குறிவைக்கப்பட்டார்கள். இப்போது இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள்" என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    முஸ்லிம்கள் முதலில் குறிவைக்கப்பட்டார்கள். இப்போது இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள்" என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    கொல்கத்தாவில் அன்னைத் தெரசாவின் மிஷனரி ஆப் சாரிட்டியின் அமைப்பின் வங்கிக்க கணக்குளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவ்வாறு எந்த கணக்கையும் முடக்கவில்லை, லைசன்ஸ் புதுப்பதில் மட்டும் சிக்கல் இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்தது.

    ஆனால் இந்த சர்ச்சை இன்னும் முடியவில்லை, கிறித்துவ அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மிஷனரி ஆஃப் சாரிட்டி அமைப்பும் கண்டனங்களை வெளியிட்டிருந்தது, இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் பதில் அளித்திருந்தது, அதாவது வங்கிக் கணக்கை முடக்கவில்லை, லைசென்ஸ் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ளது என்றும் மிஷனரிக்கு எதிரான தகவல்கள் வந்ததாகவும் அதனால் லைசன்ஸ் புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கூறியது.

    அயல்நாட்டு நிதி வரும் வங்கிக் கணக்குகளில் லைசன்ஸ் புதுப்பிக்கும் வரை எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய முடியாது ஏற்பட்டுள்ளது, இதனை கிறிஸ்துமஸ் தினத்தன்று செய்ததாகவும், நாட்டில் ஏழைகளை விடவும் மிகவும் ஏழைகள் மீதான தாக்குதல் இது என்றும் இதனால் 22,000 பேருக்கு மருத்துவ உதவி, உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பாம் இந்த விவகாரம் குறித்து தனது சமூக ஊடகப் பதிவில், “மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைளை சில ஊடகங்கள் மறைத்துவிட்டது வேதனைக்குரியது, வெட்கக்கேடு.

    ப.சிதம்பரத்தின் பதிவு:





    மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அங்கீகாரத்தை புதுப்பிக்கக் கோரும்போது, அதை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது என்பது இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் எளியவர்களுக்காக மகத்தான சேவை செய்துவரும் என்ஜிஓ-களுக்கு எதிரானத் தாக்குதல்.

    மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி விவகாரத்தில், கிறிஸ்தவ தொண்டுப் பணிக்கு எதிராக பாகுபாட்டுடன், முன்முடிவுடன் மத்திய அ ரசு நடப்பது தெளிவாகிறது. முஸ்லிம்கள் முதலில் குறிவைக்கப்பட்டார்கள். இப்போது இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள்" என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Christianity

    அடுத்த செய்தி