ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெங்கு நோயாளிக்கு ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விபரீதம்.. போலி ரத்த பிளேட்லெட் விற்ற 10 பேர் கைது

டெங்கு நோயாளிக்கு ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விபரீதம்.. போலி ரத்த பிளேட்லெட் விற்ற 10 பேர் கைது

டெங்கு நோயாளிகளுக்கு போலி பிளேட்லெட் விற்ற 10 பேர் கைது

டெங்கு நோயாளிகளுக்கு போலி பிளேட்லெட் விற்ற 10 பேர் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களுக்கு போலி ரத்த பிளேட்லெட் விற்பனை செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களின் விடுமுறைகளை ரத்து செய்து அனைவரையும் பணிக்கு வரச் சொல்லி அரசு கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது.

  டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அவர்களுக்கு ரத்தத்தில் ட்ரிப்ஸ் மூலம் பிளேட்லெட்டுகள் ஏற்ற வேண்டிய தேவை ஏற்படும். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு காரணமாக அங்கு பிளேட்லெட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை வைத்து பல மோசடி சம்பங்களும் அரங்கேறி வருகின்றன.

  அந்த வகையில் அம்மாநிலத்தின் பிராயக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 32 வயது டெங்கு நோயாளிக்கு டிரிப்ஸ்சில் பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் கலந்து ரத்தத்தில் ஏற்றியுள்ளனர். இதன் காரணமாக நோயாளி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அரசு உத்தரவின் பேரில் அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறை நடத்திய ரெய்டில் போலி பிளேட்லெட் பாக்கெட்டுகளை கடத்தி விற்ற 10 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது.

  இதையும் படிங்க: ’ஏசியை இப்படி பயன்படுத்தாதீங்க... ப்ளீஸ்..! - சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

  இது தொடர்பாக மாவட்ட காவல் தலைவர் ஷைலேஷ் பாண்டே கூறுகையில், "பிரயாக்ராஜ் பகுதியில் சில நாள்களாக டெங்கு பரவல் தீவிரமாக உள்ளதால் ரத்த பிளேட்லெட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதை பயன்படுத்தி ரத்த வங்கிகளில் இந்த கும்பல் ரத்த பிளாஸ்மாவை வாங்கியுள்ளனர்.

  குற்றவாளிகளை கைது செய்த பிரயாக்ராஜ் காவல்துறை

  பின்னர் அந்த பாக்கெட்டுகளை மாற்றி அதை பிளேட்லெட்டுகள் என்று கூறி சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர். பொதுவாக ஏழை பாமர மக்களை குறிவைத்து இந்த மோசடி நடந்துள்ளது" என்றார்.

  மருத்துவத்துறையிலேயே இதுபோன்ற மோசடி நடைபெற்றுள்ளது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Blood, Dengue, Dengue fever, Uttar pradesh