• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து திஹார் சிறைக்கு திரும்பினார் ப.சிதம்பரம்

எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து திஹார் சிறைக்கு திரும்பினார் ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

  • Share this:
வயிற்று வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிகிச்சை முடிந்து திகார் சிறைக்கு திரும்பினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதாக ப.சிதம்பரம் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறை மருத்துவக்குழுவினர் பரிந்துரையின்பேரில் ப.சிதம்பரம் எயம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு, ப.சிதம்பரம் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: