விசாகப்பட்டினத்தில் முதல்வரின் தேசிய குத்து சண்டை போட்டியை அமைச்சர் ரோஜா துவக்கி வைத்தார். போட்டி தொங்கியவுடன் அவரும் குத்துச் சண்டை போட்டு மகிழ்ந்தார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசில், நடிகை ரோஜா சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார் முன்னாள் நடிகை ரோஜா.
இவர் சுற்றுலா, கலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஆந்திர மாநில அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் பேச்சு, செயல்கள் ஆகிவற்றின் மூலம் பரபரப்பு கிளப்பும் ரோஜா கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்பு உடைய வகையில் செயல்பட்டு வருகிறார்.
Also see... ''இதுதான் சான்ஸ்''.. மேடையில் ஏறி டான்ஸ் ஆடிய அமைச்சர் ரோஜா.. ஆச்சரியப்பட்ட மாணவிகள்!
இதற்கு முன்னர் நகரியில் கபடி போட்டியை துவக்கி வைத்த போது கபடி ஆடி அசத்தினார் ரோஜா. அதன்பின் திருப்பதி உட்பட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நடனமாடினார்.
இந்த நிலையில் இன்று விசாகப்பட்டினத்தில் முதல்வரின் தேசிய குத்துச்சண்டை போட்டியை துவக்கி வைத்த ரோஜா குத்து சண்டை போட்டு சுவாரஸ்யபடுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Roja, Visakhapatnam S01p04