ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹிமந்தா பிஸ்வா சர்மா Vs சர்பானந்தா சோனோவால்: அசாமின் புதிய முதல்வர் யார்? நீடிக்கும் சஸ்பென்ஸ்!

ஹிமந்தா பிஸ்வா சர்மா Vs சர்பானந்தா சோனோவால்: அசாமின் புதிய முதல்வர் யார்? நீடிக்கும் சஸ்பென்ஸ்!

ஹிமந்தா பிஸ்வா சர்மா Vs சர்பானந்தா சோனோவால்

ஹிமந்தா பிஸ்வா சர்மா Vs சர்பானந்தா சோனோவால்

அசாம் சட்டமன்ற தேர்தலை முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே பாஜக கூட்டணி சந்தித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அசாமின் முந்தைய முதல்வர் சர்பானந்தா சோனோவால்:மற்றும் முன்னாள் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் டெல்லியில் மூத்த பாஜக தலைவர்களுடன் மாறி மாறி சந்திப்பு நடத்தி வருவதால் அசாமின் புதிய முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் சட்டமன்றத்திற்கான தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது பாஜக கூட்டணி. இதில் 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றிருக்கும் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டதால் தற்போது முதல்வரை தேர்வு செய்யும் கட்டம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் முதல்வர் போட்டியாளர்களாக உள்ளனர். இருவரையும் ஆலோசனைக்காக டெல்லிக்கு அழைத்துள்ளது பாஜக தலைமை. இதனையடுத்து இன்று காலை இருவருமே டெல்லியை அடைந்துள்ளனர்.

அசாமைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் வட கிழக்கு மாநிலங்களில் பாஜக ஒருங்கிணைப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் உடன் இருந்துள்ளனர்.

அசாமின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வெளியே வந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடையே பேசும்போது, கவுகாத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும், உங்களின் கேள்விகள் அனைத்துக்கும் இந்த கூட்டத்திற்கு பின்னர் பதில் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க:  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு!

அசாம் சட்டமன்ற தேர்தலை முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே பாஜக கூட்டணி சந்தித்தது. அசாம் மாநிலத்தின் தற்போதைய பொறுப்பு முதல்வர் சர்பானந்தா சோனோவால் சோனோவால் - கச்சரி என்ற பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். 2016 சட்டமன்ற தேர்தலை இவரை முன்னிறுத்தியே பாஜக எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

First published:

Tags: Assam, Assam Assembly Election 2021, BJP