'Fair and Lovely' ஸ்கின் கிரீம் பெயர் மாற்றம்... Fair என்ற வார்த்தையை நீக்கியது ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம்..
'மிகவும் புகழ்பெற்ற இந்த ஸ்கின் கிரீமின் பெயரை மாற்ற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி Fair என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளனர்.

ஃபேர் அண்ட் லவ்லி
- News18 Tamil
- Last Updated: June 26, 2020, 8:05 AM IST
முக அழகுக்கு தற்போது எத்தனை ஸ்கின் கிரீம்கள் இருந்தாலும் இதற்கெல்லாம் முன்னோடியாக இருப்பது ஃபேர் அண்ட் லவ்லி தான். மிகவும் புகழ்பெற்ற இந்த ஸ்கின் கிரீமின் பெயரை மாற்ற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி Fair என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வலுத்தும் வரும் நிலையில் யூனிலிவர் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அழகு என்றால் வெள்ளையாக இருப்பது என்று பொருள்படும் ஃபேர், வொய்ட் மற்றும் லைட் போன்ற வார்த்தைகளை நீக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக யூனிலிவர் நிர்வாகி சஞ்சீவ் மேத்தா கூறுகையில், “கடந்த 2019-ல் ஃபேர் அண்ட் லவ்லி கிரீமிலிருந்து கருப்பு மற்றும் வெள்ளை நிறம் என இரண்டு முகங்களை நீக்கிவிட்டோம். வெள்ளை சருமம் என்பதற்கு பதிலாக ஆரேக்கியமான சருமம் என்றும் இணைத்துள்ளோம்“ என்றுள்ளார்.
மேலும் ஃபேர் அண்ட் லவ்லி பெயரை க்லோவ் அண்ட் லவ்லி (Glow & lovely) என்று மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் புதிய பிராண்ட் பெயரை வெளியிடுவதில் மிகவும் கவனமாக இருக்க விரும்புகிறோம். புதிய பெயர் என்ன என்பதை எங்களால் தற்போது உறுதிப்படுத்த முடியாது என ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.