• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சாவில் இணைந்த காதலர்கள்.. காதல் ஜோடியின் திருமண கனவு கல்லறையில் நிறைவேறியது..

சாவில் இணைந்த காதலர்கள்.. காதல் ஜோடியின் திருமண கனவு கல்லறையில் நிறைவேறியது..

சாவில் இணைந்த காதலர்கள்..

சாவில் இணைந்த காதலர்கள்..

முகேஷ் - நேஹா இருவருமே ஒரே சாதியை மட்டுமல்ல ஒரே உட்பிரிவையும் சேர்ந்தவர்கள். இதுவே அவர்களின் திருமணத்துக்கு தடையாகவும் இருந்திருக்கிறது.

  • Share this:
உயிருடன் இருந்த போது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், காதல் ஜோடியின் தற்கொலைக்கு பின்னர் கல்லறையில் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களுடைய கனவை நிறைவேற்றியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தின் வேட் எனும் கிராமத்தில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 1) மரக்கிளையில் இளவயது ஆண் மற்றும் பெண் என இருவர்  தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தங்களால் திருமணம் செய்து கொள்ள இயலாது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது பின்னர் தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி அருகே இருக்கும் பலாத் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். முகேஷ் சோனவானேவுக்கு 22 வயது, அவர் நேஹா தாக்கரே எனும் 19 வயது பெண்ணை காதலித்து வந்தார். இருவருமே உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

Also Read:  அட்ரஸ் கேட்பது போல் வந்து, மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

தங்களுடைய விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற முடிவெடுத்த முகேஷ், நேஹாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து தருமாறு கேட்டு நேஹாவின் பெற்றோரை அணுகியுள்ளார். முகேஷ் - நேஹா இருவருமே ஒரே சாதியை மட்டுமல்ல ஒரே உட்பிரிவையும் சேர்ந்தவர்கள். இதுவே அவர்களின் திருமணத்துக்கு தடையாகவும் இருந்திருக்கிறது.

குறிப்பிட்ட சாதியின் வழக்கப்படி உட்பிரிவில் திருமணம் செய்வது கிடையாது என்பதால் அவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரின் பெற்றோருமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிந்த பின்னர் இனி வாழ்ந்து என்ன பயன் என நினைத்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Also Read:  யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

தற்கொலை செய்வதற்கு முன்னர் முமேஷ் ‘குட் பை’ என தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். தற்கொலை குறித்து அந்த ஜோடி கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை.

தங்களின் பிள்ளைகள் திருமணம் செய்ய முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது இருவரின் பெற்றோரையும் துயரத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து இரு வீட்டாரும் பேசி, தற்கொலை செய்து கொண்ட தங்களது பிள்ளைகளின் ஆசையை சாவுக்கு பின்னராவது நிறைவேற்றி விடலாம் என மயானத்தில் வைத்து காதல் ஜோடிக்கு திருமண சடங்குகளை செய்து பின்னர் இருவரையும் ஒரே குழியில் வைத்து புதைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமணம் நடக்காது என்பதால் காதலர்கள் இருவரும் சாவதற்கு முடிவெடுத்ததும், அவர்களின் சாவிற்கு பின்னர் மயானத்தில் அவர்களுக்கு திருமண சடங்குகள் நடத்தியதும் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: