ஹோம் /நியூஸ் /இந்தியா /

கருப்பாக இருப்பதாக கேலி செய்த கணவன்.. ஆணுறுப்பை வெட்டிய மனைவி.. சத்தீஸ்கரில் பயங்கரம்

கருப்பாக இருப்பதாக கேலி செய்த கணவன்.. ஆணுறுப்பை வெட்டிய மனைவி.. சத்தீஸ்கரில் பயங்கரம்

மாதிரி படம்

மாதிரி படம்

கணவனை கொலை செய்து விட்டு யாரோ கணவனை கொலை செய்துவிட்டதாக அக்கம் பக்கத்தில் மனைவி நாடகமாடியதும் அம்பலம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chhattisgarh, India

  தன் கருப்பு நிறத்தை கேலி செய்த கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் சட்டீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள அம்ளிஸ்வர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் சோன்வான் (40). இவரது மனைவி சங்கீதா சோன்வானி(30). மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை வைத்து  அவரது கணவர் கேலி செய்து வருவதும்,இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்த் சோன்வானி அவரது மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை விடாமல் கேலி செய்து வந்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கணவன் ஆனந்தை வெட்டி கொலை செய்துள்ளார்.மேலும் கூர்மையான ஆயுதத்தை கொண்டு கணவனின் ஆணுறுப்பை அவரது மனைவி வெட்டி எடுத்துள்ளார்.

  Also Read: சென்னையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ரவுடி வெட்டிப் படுகொலை

  இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள  பட்டன் காவல்துறையினர் சங்கீதா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கு குறித்து பேசிய  பட்டன் காவல்துறை தேவன்ஷ் ரத்தோர், ஆனந்த் அவரது மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை வைத்து தினமும் கேலி செய்து வந்துள்ளதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதியினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மேலும் ஆத்திரமடைந்த சங்கீதா தனது கணவரை வீட்டில் வைத்திருந்த கோடரியால் தாக்கி சம்பவ இடத்திலேயே அவரைக் கொன்றதாக கூறினார்.மேலும் கூர்மையான ஆயுதத்தால் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டதாக காவல் துணைப் பிரிவு அதிகாரி தேவன்ஷ் ரத்தோர் தெரிவித்துள்ளார்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chhattisgarh, Crime News