காவி உடையில் திருவள்ளுவர்... எதிர்ப்பு கிளம்பியதால் புகைப்படத்தை மாற்றிய வெங்கையா நாயுடு

காவி உடையில் திருவள்ளுவர்... எதிர்ப்பு கிளம்பியதால் புகைப்படத்தை மாற்றிய வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு
  • Share this:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை வெங்கையா நாயுடு பதிவிட்டிருந்தார்.

வெங்கையா நாயுடுவின் பதிவில் காவி நிற உடையில், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, நெற்றியில் விபூதி தரித்திருந்த திருவள்ளுவரின் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். தமிழக அரசு வெளியிட்ட திருவள்ளுவரின் புகைப்படத்தை மாற்றுமாறு கருத்துகள் பதிவிடப்பட்டன.
காவி உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தனது பழைய பதிவை நீக்கிய இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, காவி உடை இல்லாமல் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டார்.மேலும் அந்த பதிவில், “சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது.

அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழக பாஜகவின் ட்விட்டர் பதிவில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் இன்று பதிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது போல் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பாஜக வெளியிட்டு அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பணமதிப்பு உயரும் - சுப்பிரமணியன் சுவாமி
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading