Home /News /national /

விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து 8 பேர் பலி:  மத்திய அமைச்சரின் மகன் காரணம்- விவசாயிகள் புகார்

விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து 8 பேர் பலி:  மத்திய அமைச்சரின் மகன் காரணம்- விவசாயிகள் புகார்

உ.பி. லக்கிம்பூர் திகுனியா கிராமத்தில் பதற்றம்

உ.பி. லக்கிம்பூர் திகுனியா கிராமத்தில் பதற்றம்

உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் பலியான சம்பவத்தில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றிய விவகாரத்தில் அமைச்சரின் மகன் மீது விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர்.

    நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக லக்கிம்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சிங், நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும் சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

    பலியான 4 விவசாயிகள் லவ்பிரீத் சிங், தல்ஜீத் சிங், நச்சட்டார் சிங், குர்வீந்தர் சிங் என்று விவசாய அமைப்பு பெயர்களை வெளியிட்டுள்ளது. சம்யுக்த் கிசான் மோர்ச்சா குற்றம்சாட்டுகையில், “மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா டேனியின் கார் மற்ற 3 வாகனங்களுடன் வந்தது. அப்போது ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு விவசாயிகள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அமைச்சரின் மகனின் கார் கூட்டத்துக்குள் புகுந்து நசுக்கியது. சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் தஜீந்தர் சிங் விர்க்கும் தாக்கப்பட்டார். அவர் மீது காரை ஏற்றிக் கொல்லப்பார்த்தனர்.

    துப்பாக்கியாலும் சுட்டனர், இதில் ஒரு மரணம் அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா டேனி துப்பாக்கியால் சுட்டதினால் ஏற்பட்டதே.” என்று குற்றம்சாட்டினர், ஆனால் நியூஸ் 18 சேனலில் அஜய் மிஸ்ரா கூறும்போது, தன் மகன் சம்பவ இடத்தில் இல்லவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்தில் தங்கள் கார்கள் மீது கல்வீச்சு நடந்தது இதில் ஒரு கார் கட்டுப்பாடு இழந்தது இதனால் இரண்டு விவசாயிகள் பலியாகினர், கோபமடைந்த விவசாயிகள் என்னுடைய ஓட்டுநரை கொலை செய்தனர், 3 பாஜகவினரையும் கொலை செய்தனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: உ.பியில் அமைச்சருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலி!

    ஆனால் விவசாய அமைப்பினரோ முதலில் உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை கேரோ செய்தனர். பிறகு அமைச்சர்கள் வாகனம் செல்லும் சாலையில் இருபுறமும் நின்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய போதுதான் 3 கார்கள் விவசாயிகள் கூட்டத்தில் நுழைந்தது. இதில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் இருந்தது. என்று குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் மட்டுமல்லாது, உ.பி, முழுதுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக்கப்பட்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Farmers Protest, News On Instagram, Uttar pradesh

    அடுத்த செய்தி