சி.பி.ஐ விசாரணை நடத்தத் தடை - சத்திஸ்கர் அரசு அதிரடி

விசாரணை நடத்த வேண்டுமென்றால், சி.பி.ஐ.அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக சி.பி.ஐக்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

Web Desk | news18
Updated: January 11, 2019, 8:30 PM IST
சி.பி.ஐ விசாரணை நடத்தத் தடை - சத்திஸ்கர் அரசு அதிரடி
சிபிஐ
Web Desk | news18
Updated: January 11, 2019, 8:30 PM IST
சத்திஸ்கர் மாநிலத்தில் முன் அனுமதியில்லாமல் சிபிஐ சோதனை செய்யக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மத்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. மாநிலக் கட்சிகளை ஒடுக்குவற்கு சி.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது என்று கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

இந்தநிலையில், ’வழக்கு விசாரணை தொடர்பாக, மாநிலத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் தவிர, வேறு இடங்களில் சோதனை அல்லது விசாரணை நடத்த வேண்டுமென்றால், சி.பி.ஐ.அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக சி.பி.ஐக்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அதேபோல, மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும், முன் அனுமதியின்றி சோதனை நடத்த தடை விதித்து இருந்தார்.

இந்நிலையில், சத்தீஷ்கர் மாநில அரசும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக சத்தீஷ்கர் மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதிய விவகாரங்களில் சி.பி.ஐ தனது அதிகார வரம்பை சத்தீஷ்கர் மாநிலத்திற்குள் முன் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2001 ஆம் ஆண்டு அளித்திருந்த ஒப்புதலை மாநில உள்துறை திரும்ப பெற்றுள்ளது.

Also see:

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...