கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!

நாதுராம் கோட்சே, ஒரு தேசபக்தர். அவர், அப்போது மட்டுமல்ல, இப்போதும், எப்போதும் தேச பக்தர். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களை மக்கள் தேர்தலில் தோற்கடிப்பார்கள்’

கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
சாத்வி பிரக்யா சிங் தாகுர்
  • News18
  • Last Updated: May 16, 2019, 7:11 PM IST
  • Share this:
காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை தேசப்பக்தர் என்று கூறியதற்காக பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் தாகுர் மன்னிப்பு கோரினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் தாகுரிடம், கமல்ஹாசன் கோட்சே குறித்து பேசிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பிரக்யா, ‘நாதுராம் கோட்சே, ஒரு தேசபக்தர். அவர், அப்போது மட்டுமல்ல, இப்போதும், எப்போதும் தேச பக்தர். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களை மக்கள் தேர்தலில் தோற்கடிப்பார்கள்’ என்று தெரிவித்தார். பிரக்யாவின் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


பிரக்யாவின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, ‘தேசத் தந்தையை கொலை செய்தவர்களை பா.ஜ.க தலைவர்கள் உண்மையான தேசபக்தர் என்று அழைக்கின்றனர். நாட்டுக்காக உயிர் நீத்த ஹேமன்ட் கர்கரே போன்றவர்களை தேச விரோதி என்கின்றனர்’ என்று விமர்சித்தார்.

பிரக்யா தாகுரின் பேச்சுக்கு பா.ஜ.கவும் கடும் கண்டனம் தெரிவித்தது. கோட்சே குறித்து பேசியதற்கு பிரக்யா பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியது. அதனையடுத்து, கோட்சே குறித்து பேசியதற்கு பிரக்யா சிங் தாகுர் மன்னிப்பு கோரியுள்ளார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: May 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading