முகப்பு /செய்தி /இந்தியா / அயோத்தி வழக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ள 4 முக்கிய வழக்குகள்...!

அயோத்தி வழக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ள 4 முக்கிய வழக்குகள்...!

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அயோத்தி நில பிரச்னையில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த வாரம் மேலும் 4 முக்கிய வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். பணி ஓய்வுக்கு முன் தனது தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்பை அவர் வெளியிடுகிறார். அந்த வகையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேலும் 4 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு முக்கியமானதாகும்.

மேலும் ‘காவலாளியே திருடன்’ என்ற கோஷத்துக்காக ராகுல்காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பும், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களின் தீர்ப்பும் இந்த வாரம் வழங்கப்படும் என தெரிகிறது.

இதைப்போல, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் என்ற டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Ranjan Gogai, Supreme court