ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேற்கு வங்கத்தில் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு!

மேற்கு வங்கத்தில் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

வடக்கு தினஜ்பூரில் பாலுர்கட் பகுதியில் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் மேற்கு வங்கத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்துள்ள மால்டா மாவட்டத்தின் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, வடக்கு தினஜ்பூரில் பாலுர்கட் பகுதியில் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

கடந்த மூன்று நாள்களாக அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து பா.ஜ.க உறுப்பினர்கள் மாவட்ட நீதிபதி வீட்டு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தெரிவித்த யோகி ஆதித்யநாத் அலுவலகம், ‘ஆதித்யநாத்துக்கு ஏற்படும் பிரபலத்தின் காரணமாக அவர் வரும் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆதித்யநாத்தின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேரணியில் கலந்துகொள்ள மேற்குவங்கம் சென்ற பா.ஜ.க தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவற்கும் அம்மாநில அரசு அனுமதி மறுத்தது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

Also see:

First published:

Tags: Yogi adityanath