Home /News /national /

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபர்..8 வருடம் கழித்துக் கண்டுபிடித்த மனைவி - உண்மை வெளிவந்தது எப்படி?

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபர்..8 வருடம் கழித்துக் கண்டுபிடித்த மனைவி - உண்மை வெளிவந்தது எப்படி?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குஜராத்தில் வசிக்கும் 40 வயதான பெண், தனது கணவர் திருமணத்திற்கு முன்னாள் பெண்ணாக இருந்தவர் என்பதை 8 வருடத் திருமணத்திற்குப் பின் கண்டறிந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India
    குஜராத்தில் உள்ள வதோதரா பகுதியில் வசிப்பவர் 40 வயது பெண்மணி. 2014ம் ஆண்டில் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். தற்போது 8 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின் தற்போது அவரின் கணவர், திருமணத்திற்கு முன்பு பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் என்ற அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.

    இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கணவர் பாலின மாற்ற அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டு ஆண் என்று ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். மேலும் அவரின் குடும்பத்தினர் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

    8 வருடம் கழித்துக் கண்டுபிடித்தது எப்படி?

    பாதிக்கப்பட்ட பெண்மணியின் முதல் கணவர் 2011ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது அவருக்கு 14 வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் 2014ம் ஆண்டு மாட்ரிமோனியல் தலத்தில் விராஜ் வர்தன் என்ற நபரைச் சந்தித்துள்ளார். அதன் பின்னர் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

    இருவரும் இணைந்து காஷ்மீர்க்குத் தேனிலவு சென்றுள்ளனர். ஆனால் அவர் பல காரணங்களைச் சொல்லி தாம்பத்திய உறவிலிருந்து தப்பி வந்துள்ளார். பல நாட்கள் அப்படியே சென்றதில் மனைவி கேட்டதற்குத் தான் ரஷ்யாவில் இருக்கும் போது ஒரு விபத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான திறனை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

    மேலும் இதனைக் குணப்படுத்த ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு கொல்கத்தாவிற்கு உடல் எடையைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

    மனைவி தொடர்ந்து இது குறித்துக் கேட்டதற்கு ஒரு வழியாகத் தான் பிறவியில் பெண் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். விஜயதா என்று இருந்த அவர் பாலின மாற்ற அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறி விராஜ் வர்தன் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளார்.

    Also Read : மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விபத்து.. சிறார்கள் உள்பட 9 பேர் பலி

    இந்த அதிர்ச்சியான சம்பவத்தைத் தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண்மணி, கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மேல் புகார் அளித்துள்ளார். அதில் மேலும் அவர் கணவர் அவரிடம் இயற்கைக்கு அல்லாத உடலுறவில் ஈடுபடத் துன்புறுத்துவதாகவும், இதைப் பற்றிப் பேசினால் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டதுள்ளார்.

    புகாரின் பெயரில் கோத்ரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார், விராஜ் வர்தனை டெல்லியிலிருந்து கைது செய்து வதோதரா அழைத்துவந்துள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Crime News, Gujarat

    அடுத்த செய்தி