54 ஆண்டுகளாக கேரளா காங்கிரஸ் வசம் இருந்த பலா தொகுதியில் இடதுசாரி கூட்டணி வெற்றி!

54 ஆண்டுகளாக கேரளா காங்கிரஸ் வசம் இருந்த பலா தொகுதியில் இடதுசாரி கூட்டணி வெற்றி!
மணி சி கப்பான்
  • News18
  • Last Updated: September 27, 2019, 2:16 PM IST
  • Share this:
கேரள மாநிலம் பலா தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர், மணி சி கப்பான் சுமார் 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

கேரளா மாநிலம் பலா தொகுதி நாட்டிலேயே மிக வித்தியாசமான தொகுதியாகும். ஏன்? என்று கேட்டால், தொகுதி உருவாக்கப்பட்டது முதல் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வரை அங்கு ஒருவரே எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

1964-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து கேரளா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய கே.எம் மாணி, 1965-ம் ஆண்டில் பலா தொகுதியில் இருந்து முதன் முதலாக சட்டமன்றத்துக்கு சென்றார்.


அதன் பின்னர் நடந்த 12 தேர்தல்களிலும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று அரை நூற்றாண்டாக எம்.எல்.ஏ.வாக இருந்தார் மாணி.

86 வயதான நிலையில் கே.எம் மாணி, கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து, அங்கு கடந்த 23-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இடதுசாரி கூட்டணி சார்பில் மணி சி கப்பான், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜோஸ் டாம், பாஜக சார்பில் ஹரி ஆகியோர் போட்டியிட்டனர்.

Loading...

இன்று வாக்குகள் எண்ணப்ப்பட்ட நிலையில், மணி சி கப்பான், சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் இடதுசாரி கூட்டணி படு தோல்வியை சந்தித்த நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றி அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

First published: September 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...