• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 15 வயது சிறுமி, 5 மாத கர்ப்பமாக இருந்த அவலம்... டெல்லியில் அதிரவைத்த பாலியல் வன்புணர்வு சம்பவம்

15 வயது சிறுமி, 5 மாத கர்ப்பமாக இருந்த அவலம்... டெல்லியில் அதிரவைத்த பாலியல் வன்புணர்வு சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

உணவு கூட கொடுக்காமல் 15 நாட்களுக்கும் மேலாக அறை ஒன்றில் அடைத்து வைத்து அவரை பலருடனும் உடலுறவு கொள்ளவைத்திருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Share this:
15 வயது சிறுமியை 13 மாதங்களாக சிறை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைநகர் டெல்லியின் மகாந்கர் காவல்நிலைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை, 4 பேர் கொண்ட கும்பல் 13 மாதங்களாக சிறை வைத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய சிறுமி தனது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவருக்கு உடல்நலக்குறைபாடுகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அச்சிறுமியை அவரின் தாயார் அழைத்துச் சென்றார். அப்போது தான் அச்சிறுமி 5 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது அவரின் தாயாருக்கு தெரியவந்தது.

இதன் பின்னர் காவல்நிலையத்தில் அச்சிறுமியின் தாயார் புகார் அளித்ததன் பேரில், பள்ளியின் காவலராக வேலை பார்த்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த உப்ரேதா குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் இதில் தொடர்புடைய ஜீது காஷ்யப், வருண் திவாரி மற்றும் அஜய் குமார் ஆகிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்ரேதா குமார் உள்ளிட்ட நான்கு பேரும் மேற்குறிப்பிட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததுடன் அவரை விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். வீட்டு வேலைக்காக சிறுமியை அழைத்துச் செல்வது போல பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று பணத்துக்காக அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

உணவு கூட கொடுக்காமல் 15 நாட்களுக்கும் மேலாக அறை ஒன்றில் அடைத்து வைத்து அவரை பலருடனும் உடலுறவு கொள்ளவைத்திருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

13 மாதங்களாக இக்கொடுமையை அனுவதித்து வந்த சிறுமி எப்படியோ அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். இதன் பின்னர் தான் அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்திருக்கிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: