குண்டு வெடிப்பு வழக்கில் 12 ஆண்டுகள் சிறைவாசம், நிரபராதி என விடுதலை பிறகு மீண்டும் கைது- விதிவலையில் சிக்கிய விசாரணைக் கைதி

மாதிரிப்படம்.

ஷாபாஸ் அகமெடின் ரத்தம் தோய்ந்த உடைகளை சிறை நிர்வாகம் அவரிடம் அளிக்கவில்லை. இப்போது சித்ரவதை அனுபவித்ததற்கான அடையாளமான அந்த ரத்தம் தோய்ந்த ஆடைகளை பாதுகாக்க புதிய மனு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் வழக்கறிஞர் முஜாகித் தெரிவித்தார்.

 • Share this:
  2008-ம் ஆண்டு ஜெய்பூரில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷாபாஸ் அகமட், 42 என்பவர் விசாரணைக் கைதியாக 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

  பிறகு டிசம்பர் 2019-ல் இவர் மீதான 8 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டு ஷாபாஸ் விடுதலைச் செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜஸ்தான் கோர்ட் நிராகரித்த சாட்சியின் அடிப்படையில் 9வது முறையாக அதே வழக்கில் மீண்டும் குற்றம்சாட்டப்பட்டார். சிறப்பு நீதிமன்றம் இவரை நிரபராதி என்று விடுவித்திருந்தது.

  கடந்த வாரம் ஷாபாஸுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வெளியேவந்தார், இந்நிலையில் 11 ஆண்டுகள் சிறையில் இருந்த போது இவர் மீது புதிய வழக்கைத் தொடராமல் வெளியே வந்தவுடன் 9வது முறையாக குற்றம்சாட்டியுள்ளது போலீஸ். இது தனக்கு ஆச்சரியமளிக்கிறது என்கிறார் ஷாபாஸ் அகமெட்.

  இந்நிலையில் நீதிபதி பங்கஜ் பண்டாரி போலீஸை நோக்கி கேட்கையில் 12 ஆண்டுகள் சிறையில் கஷ்டப்பட்டவர் மீது ஏன் அப்போதே இந்த வழக்கைத் தொடுக்கவில்லை, இப்போது எங்கிருந்து வந்தது புதிய ஆதாரம், ஞானோதயம் என்று சாடினார். இதற்குப் பதில் இல்லாமல் அரசு வழக்கறிஞர் திக்கித் திணறினார்.

  கோர்ட்டால் நிராகரிக்கப்பட்ட ஆதாரத்தை மீண்டும் எழுப்பும் போலீஸ்:

  2008, மே மாதம் 13ம் தேதி ஜெய்பூரில் 8 இடங்களில் 9 குண்டுகள் வெடித்தன. இதில் 71 பேர் பலியாகி 185 பேர் காயமடைந்தனர்.இரவு 7.20 மணி முதல் 7.45க்குள் 8 குண்டுகள் வெடித்தன, 9வது குண்டை போலீஸார் செயலிழக்கச் செய்தனர். சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டுகளாகும் இவை.

  இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றனர். இந்த ஷாபாஸ் அகமெட்தான் சாஹிதாபாத் நெட் கஃபேயிலிருந்து இந்த மெயிலை ஊடகங்களுக்கு அனுப்பியதாக போலீஸார் குற்றம்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அந்த நெட் கஃபேயின் உரிமையாளரின் சாட்சியை ராஜஸ்தான் போலீஸ் பயன்படுத்தியது.

  ஆனால் டிசம்பர் 18, 2019-ல் ஷாபாஸ் அகமெட் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதி என விடுவிக்கப்பட, மற்ற 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஷாபாஸ் எப்படி தப்பினார் என்றால் சைபர் கஃபே உரிமையாளர் கோர்ட்டிற்கு வந்து தன் நிலைப்பாட்டிலிருந்து மாறினார். போலீஸ் சாட்சியம் பொய்த்துப் போனது. ஆனால் அவரை ரிலீஸ் செய்ய வழக்கறிஞரும் உறவினர்களும் சிறைக்குச் சென்ற போது 9வது முறையாக ஷாபாஸ் மீது போலீஸ் குற்றச்சாட்டு எழுப்பியிருப்பது தெரியவந்தது.

  இந்தக் கைது குறித்து சிறை அதிகாரிகள் வழக்கறிஞரிடம் 25, டிசம்பர் 2019-ல்தான் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் முந்தைய 8 குற்றச்சாட்டுகளை அப்படியே ரிபீட் செய்துள்ளனர், என்றும் ஏற்கெனவே தன் நிலைப்பாட்டிலிருந்து மாறி கோர்ட்டால் நிராகரிக்கப்பட்ட அதே சாட்சியத்தின் அடிப்படையிலும் புதிய வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்றார். ஒரே குற்றச்சாட்டு, அதில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டவர் மீது அதே காரணங்களுக்காக, அதே சாட்சிகளுடன் மீண்டும் வழக்குத் தொடருவது சட்ட விரோதம்.

  இந்நிலையில் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பயங்கரவாதக் குற்றச்சாட்டில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களை சிறை நிர்வாகம் கடுமையாக சித்ரவதை செய்வதாக மனித உரிமைகள் புகார் எழுந்ததையடுத்து ஷாபாஸ் அகமெடை எப்படியாவது சிறையில் தள்ள வேண்டும் என்று போலீஸார் துடிப்பதாக வழக்கறிஞர் முஜாகித் குற்றம்சாட்டினர். ஷாபாஸ் அகமெட் உடலில் 11 இடங்களில் காயங்கள் இருந்ததை விசாரிக்க நீதிமன்றமே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

  ஷாபாஸ் அகமெடின் ரத்தம் தோய்ந்த உடைகளை சிறை நிர்வாகம் அவரிடம் அளிக்கவில்லை. இப்போது சித்ரவதை அனுபவித்ததற்கான அடையாளமான அந்த ரத்தம் தோய்ந்த ஆடைகளை பாதுகாக்க புதிய மனு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் வழக்கறிஞர் முஜாகித் தெரிவித்தார்.
  Published by:Muthukumar
  First published: