ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில்வேக்கு ரூ.3 லட்சம் அபராதம் - கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரயில்வேக்கு ரூ.3 லட்சம் அபராதம் - கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஒருவர் உடல் ஊனமுற்றவர் என்பதால், கீழ் பெர்த் வேண்டுமென டிக்கெட் முன்பதிவின்போது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

உடல் ஊனமுற்ற வயதான தம்பதிக்கு இடம் கொடுக்க மறுத்த வழக்கில் இந்திய ரயில்வேதுறைக்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு வயதான தம்பதிகள் இருவரும் ரயில்வே ஏ.சி கோச்சில் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவர் உடல் ஊனமுற்றவர் என்பதால், கீழ் பெர்த் வேண்டுமென டிக்கெட் முன்பதிவின்போது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு கேட்ட பெர்த் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ரயிலில் பயணிக்கும்போதும், டி.டி.ஆரிடம் இது குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர். அவரும் வயதான தம்பதியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். மேலும், அவர்களை இறங்க வேண்டிய இடத்திற்கு 100 கிலோ மீட்டருக்கு முன்னதாகவும் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

ஒரு பயணத்தில் பல்வேறு இன்னல்களை வயதான தம்பதி சந்தித்த நிலையில் இதுகுறித்து அவரது மகன் கர்நாடக நீதிமன்றத்தில் இழப்பீடுகோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கில், கடந்த 2010 ஆம் ஆண்டு தனது தாய் மற்றும் தந்தை இருவரும் சோலாப்பூரில் இருந்து ஏ.சி கோச்சில் பயணம் செய்ததாக தெரிவித்தார். மூத்த குடிமக்களான இருவரும் டிக்கெட் முன்பதிவின்போது பரிந்துரையில் (REQUEST) கீழ் பெர்த் வேண்டும் என கேட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் கேட்ட இடம் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ள புகார்தாரர், இது குறித்து பயணம் செய்த குறிப்பிட்ட தேதியில் டி.டி.ஆரிடம் முறையிட்டதாகவும் கூறியுள்ளார்.

Also read... Explainer: பாஸ்வேர்ட் ஷேரிங்கை கட்டுப்படுத்த நெட்ஃப்ளிக்ஸ் எடுத்த சோதனை நடவடிக்கை - என்ன காரணம்?

தனது பெற்றோரில் ஒருவர் உடல் ஊனமுற்றவர் எனக் கூறியும் டி.டி.ஆர் அதனை பொருட்படுத்தாமல் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் பயணம் செய்த கோச்சில் 6 லோவர் பெர்த்துகள் காலியாக வந்தபோதும், பெற்றோரின் கோரிக்கைக்கு டி.டி.ஆர் செவிசாய்க்கவில்லை எனத் குற்றம்சாட்டியுள்ள மகன், இறங்க வேண்டிய இடத்திற்கு 100 கிலோ மீட்டருக்கு முன்னதாக அவர்கள் இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிர்ரூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த தனக்கு, தனது பெற்றோர் வரவில்லை என்றதும் அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், அவர்கள் தவறான இடத்தில் இறக்கவிடப்பட்டதை அறிந்து, அங்கு சென்று அழைத்து வந்ததாக தெரிவித்துள்ள மகன், இதற்கு ரயில்வே துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். மூத்த குடிமக்களை கோரிக்கையை நிராகரித்தது மட்டும்மல்லாமல், தவறாக வழிகாட்டி வேறொரு இடத்தில் இறக்கிவிட்டு அலைக்கழித்ததற்காக இந்தியன் ரயில்வேக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். சுமார் 11 ஆண்டுகள் இந்த வழக்கு நடைபெற்ற நிலையில், அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், வயதான தம்பதிக்கு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவீனமாக 2,500 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Indian Railways