கடுமையான ஒடுக்குமுறைகளை தனது கல்விக்காக எல்லைகளை கடந்து வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு பெண் தனது போராட்டத்தின் வெற்றியாக முதுகலை பட்டத்தை தங்கப்பதக்கத்துடன் வென்றுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். தாலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அங்கு மனித உரிமைகளை குறிப்பாக பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. பெண்கள் கல்வி கற்க பல விதமான தடைகளை தாலிபான் போட்டுள்ள நிலையில், தனது கல்விக்காக 2021இல் ஆப்கானை விட்டு வெளியேறி இந்தியா வந்தவர் தான் ராசியா முராதி. ஆப்கானை சேர்ந்த முராதி, தனது இளங்கலை படிப்பை முடித்து விட்டு சேவைப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
தாலிபான் ஆட்சி ஆப்கானில் நிறுவப்பட்ட நிலையில், ICCR அமைப்பின் ஸ்காலர்ஷிப் மூலம் இந்திய வந்து எம்ஏ பட்டப்படிப்பை படிக்க தொடங்கினார். குஜராத்தில் உள்ள வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்ஏ பொது நிர்வாகம் படித்த முராதி, தனது இரண்டு ஆண்டு பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததோடு, சிறந்த மாணக்கர்களில் ஒருவராக தேர்வாகி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
தனது கல்விக்காக குடும்பத்தை பிரிந்து மூன்றாண்டுகள் வாழும் ராசிய முராதியின் தன்னிம்பிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்ட முராதி, "அனைத்து விதத்திலும் பெண்கள் கல்வி பெற தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது அவமானத்திற்குரியது. நான் இந்த நிலையை அடைய உதவிய இந்தியாவுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் நன்றி. பெண்களால் எந்த துறையிலும் முன்னேற முடியும் என்பதற்கு எனது வாழ்வே உதாரணம்" என்றுள்ளார்.
இதையும் படிங்க: மகள்களுக்காக 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி.. மகளிர் தினத்தில் சுவாரஸ்யம்..!
தனது வெற்றி மகிழ்ச்சி அளித்தாலும், குடும்பத்தை 3 ஆண்டுகள் பார்க்க முடியவில்லையே என்ற சோகம் வாட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். எம்ஏ படிப்பைத் தொடர்ந்து இந்தியாவிலேயே பிஎச்டி படிக்க திட்டமிட்டுள்ளதாக ராசியா முராதி தெரிவித்துள்ளார். விரைவில் தனது நாட்டில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் எனவும் அப்போது அங்கு சென்று மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் கூறுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Education, Taliban, Women achievers