• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அயோத்தி ராமர் கோவிலுக்காக ஆப்கன் பெண்ணால் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட காபுல் நதி நீர்!

அயோத்தி ராமர் கோவிலுக்காக ஆப்கன் பெண்ணால் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட காபுல் நதி நீர்!

Yogi Adityanath

Yogi Adityanath

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள காபுல் நதியில் இருந்து நீரை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

  • Share this:
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்காக காபுல் நதி நீரை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்திருப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நூற்றாண்டை கடந்தும் சர்ச்சைக்குரியதாக திகழ்ந்து வந்த இடம் ராம் லல்லா அமைப்புக்கு சொந்தமானது எனவும் அங்கு ராமர் கோவில் கட்டலாம், அதே போல பாபர் மசூதி கட்டுமானத்துக்காக ஐந்து ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச அரசு அளிக்க வேண்டும் என்ற பரபரப்பு தீர்ப்பை கடந்த 2019ம் ஆண்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்தது. இதன் மூலம் பல ஆண்டுகளாக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நீடித்த சர்ச்சைகள் சுமூக முடிவை எட்டியது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்காக பிரதமர் மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். தற்போது கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2023 டிசம்பருக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது. இந்த கட்டுமான பணிக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் நிதியும், தெய்வீக பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Also read:  ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ.51 கிடைக்கும் – வாட்ஸ்அப் அறிவித்துள்ள கேஷ்பேக் ஆஃபர் விவரம் இதோ!

இதன் ஒரு பகுதியாக தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், காபுல் நதியில் இருந்து நீரை அனுப்பி வைத்திருப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள காபுல் நதியில் இருந்து நீரை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எனவே அந்த ஆப்கன் பெண்ணின் உணர்வுகளுடன் அவர் அனுப்பி வைத்திருக்கும் நீரை நான் பகவான் ராமருக்கு அளிப்பதற்காக அயோத்தி செல்ல இருக்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Also read:   எங்களை அங்கீகரிக்காவிட்டால்… உலக நாடுகளுக்கு தாலிபான்கள் விடுத்த எச்சரிக்கை!

தொடர்ந்து பேசிய அவர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு மத்தியிலும் இந்தியா மீதான மரியாதை மற்றும் பற்றால், தனது உணர்வுகளை அப்பெண் வெளிப்படுத்தியிருக்கிறார். கங்கை நீருடன் சேர்த்து காபுல் நதி நீரையும் ராமருக்கு படைக்க இருக்கிறோம். அவருடைய உணர்வுகளை நான் மதிக்கிறேன். அந்தப் பெண்ணுக்காகவும், அவரின் குடும்பத்துக்காகவும், அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும் நான் ராமரிடம் வேண்டிக்கொள்வேன்” என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது நீர் நிரம்பிய சிறிய பாட்டில் ஒன்றையும் யோகி ஆதித்யநாத் பத்ரிகையாளர்களிடம் காட்டினார்.

ஸ்ரீராம ஜென்மபூமியில் கடந்த காலங்களில் இருந்த தடைகள் மற்றும் போராட்டங்கள் நீங்கி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் எனவும் யோகி கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: