Home /News /national /

இராணி மேரி கல்லூரி வாசலில் அதிமுகவினர் மறியல்: காவல்துறை ஆணையர் நேரில் ஆய்வு

இராணி மேரி கல்லூரி வாசலில் அதிமுகவினர் மறியல்: காவல்துறை ஆணையர் நேரில் ஆய்வு

இராணி மேரி கல்லூரி வாசலில் அதிமுகவினர் மறியல்

இராணி மேரி கல்லூரி வாசலில் அதிமுகவினர் மறியல்

தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பெயரில் பெரம்பூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் இந்தியா முழுவதும் பா.ஜ.க தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.

    தற்போது வெளியாகியுள்ள நிலவரப்படி 345 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் காலை இராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப் பெட்டி  இருந்த இடத்தில் வடசென்னை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளும் இருந்துள்ளன.

    இதனால் தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பெயரில் பெரம்பூர் தொகுதிக்கான நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிமுகவிபர் இராணி மேரி கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த செய்தியாளர்களையும் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால்  நேரில் ஆய்வு நடத்தி மறியலைக் களைத்து வருகிறார்.




    தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Election 2019, Election Result, Queens mary college

    அடுத்த செய்தி