Home /News /national /

அதிமுக-பாஜக என்பது கட்டாய கல்யாணக் கூட்டணி: நாராயணசாமி

அதிமுக-பாஜக என்பது கட்டாய கல்யாணக் கூட்டணி: நாராயணசாமி

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.

கடந்த நான்கு வருடங்களாகத் தமிழகத்துக்கு வராத மோடி தேர்தல் வரும்போது மட்டும் ஏன் வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கட்டாய கல்யாணக் கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி என ராமேஷ்வரம் சென்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    ராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “அதிமுகவைச் செயல்படவிடாமல் பலவீனமாக்கியது பாஜக. ஆகவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது கட்டாய கல்யாணம் போன்றது.

    கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்துக்கு வராத மோடி, தேர்தல் வரும்போது மட்டும் ஏன் வருகிறார். தமிழகத்தில் விவசாயிகள் போராடிய போது அவர்களைச் சந்திக்க வரவில்லை. தமிழக விவசாயிகள் டெல்லி சென்று கடனை ரத்துசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்களைச் சந்திக்க வரவில்லை.

    இப்படிப்பட்ட நரேந்திர மோடி, வேஷம் போட்டுக் கொண்டு தற்போது தமிழக மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக, அதிமுகவோடு கூட்டணி சேர்ந்துகொண்டு வருகிறார். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்கள் அவர்களுடைய கூட்டணியை நிராகரிப்பார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Narayana samy

    அடுத்த செய்தி