புதிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் தலைமையில் கூட்டம் - மும்மொழிக் கொள்கைக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு!

புதிய கல்வி கொள்கை வரைவு மீதான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தின் போது யார் முதலில் பேசுவது என்பது தொடர்பாக அதிமுக, திமுக எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

news18
Updated: August 1, 2019, 3:37 PM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் தலைமையில் கூட்டம் - மும்மொழிக் கொள்கைக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு!
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
news18
Updated: August 1, 2019, 3:37 PM IST
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் திருத்தங்களும், மாற்றங்களும் அவசியம் என்று அதிமுக, திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய கல்வி கொள்கை வரைவு மீதான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாடு முழுவதும் அனைத்து இடங்களுக்கும் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட்  9-ம் தேதி மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநில எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் டெல்லியில் நடைபெறுகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போக்ரியால் தலைமையில் நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி எம்.பி.க்கள் கலந்துக் கொண்டனர்.


அப்போது, யார் முதலில் பேசுவது என்பது தொடர்பாக அதிமுக, திமுக எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இதையடுத்து புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் திருத்தங்களும், மாற்றங்களும் அவசியம் என்பதை அதிமுக, திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. திருச்சி சிவா, புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் இருக்கும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக் கூடாது, கல்வி நிறுவனங்களுடன் பல்கலைக்கழகங்களை இணைக்கக் கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

Loading...

Also see...

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...