Home /News /national /

பழங்குடியின பெண்ணின் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொடூரம்

பழங்குடியின பெண்ணின் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொடூரம்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின பெண் மீது தாக்குதல்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின பெண் மீது தாக்குதல்

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின பெண்ணை அவரின் கணவர், உறவினர்கள் முன்னரே கொடூரமாக தாக்கி அந்த பெண்ணின் உடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொடூர தாக்குதல் காரணமாக அந்த பெண்ணும் அவரது கணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜஹாபுவா பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனை விட்டு பிரிந்து 8 மாதம் அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.  அந்த பெண் முகேஷை பிரிந்து மீண்டும் தனது கணவர் வீட்டிற்கே வந்து அவருடன் வாழத் தொடங்கியுள்ளார். பெண் பிரிந்து சென்ற ஆத்திரத்தில் முகேஷ் தனது கூட்டாளிகள் ஐந்து பேரை அழைத்து அந்த பெண் வசிக்கும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அந்த பெண்ணை கணவர் மற்றும் உறவினர் முன்னரே கட்டாயமாக வெளியே இழுத்து வந்து சாலையில் வைத்து கொடூரமாக தாக்கி ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தடுக்க முயற்சித்த நிலையில் அவர்கள் மீதும் அந்நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


    அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவத்தை பார்த்தும் வீடியோக்கள் எடுத்த நிலையில், இந்த தாக்குதலை தடுக்க யாரும் முன்வரவில்லை. தாக்குதல் நடத்திய முகேஷும், அந்த பெண்ணும் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 20 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த 9-ம் வகுப்பு மாணவன்... விசாரணையில் வெளி வந்த அதிர்ச்சி தகவல்கள்

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைராலன நிலையில், முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் திவாரி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ள இருவரை  தேடி வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Attack on Women, Brutal attack on woman, Madhya pradesh, Woman shamed

    அடுத்த செய்தி